Chennai Power Cut: சென்னை மாநகராட்சியில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித பிரச்னையும் இருக்கக் கூடாது என , மின்சார வாரியமானது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும். இந்நிலையில், சென்னையில் பிப்ரவரி 3ஆம் தேதி திங்கள் கிழமையான நாளை, எந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என பார்ப்போம்.
சென்னை- நாளை மின்தடை: 03.02.2025
இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை ( பிப்ரவரி 3 ) பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மாங்காடு: மாங்காடு டவுன் பஞ்சாயத்து முழுப் பகுதி, ரகுநாதபுரம் முழுப் பகுதி, சிவந்தாங்கல் முழுப் பகுதி, சிக்கராயபுரம் முழுப் பகுதி, பட்டூர் முழுப் பகுதி, பத்ரிமேடு, பின் காலனி, ஸ்ரீனிவாச என்ஜிஆர், நெல்லித்தோப்பு மற்றும் கொள்ளுமணிவாக்கம் முழுப் பகுதி.
முகப்பேர்: டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் அவென்யூ, பாரி சாலை, ரவுண்ட் பில்டிங், எல்ஐசி காலனி, சென்னை பப்ளிக் ஸ்கூல் சாலை, 1 முதல் 6 வது தொகுதி கிழக்கு முகப்பேர், வளையபதி சாலை மற்றும் புகழேந்தி சாலை
மாத்தூர்: மாத்தூர் எம்எம்டிஏ பூங்கா, பெரிய மாத்தூர், சென்னை மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எச்டி சர்வீஸ், எம்சிஜி அவென்யூ, சின்ன சாமி நகர், காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, விளாங்காடுபாக்கம், பெரியார் நகர் தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர் மற்றும் ஜெயா நகர்.
Also Read: Chennai AC Bus: சென்னையில் எண்ட்ரி கொடுக்கும் தனியார் பென்ஸ் பேருந்துகள்: அரசு அனுமதி?
பராமரிப்பு பணி:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.
இதனால், இத்தகைய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நாளை செய்யக்கூடிய தங்களது முக்கிய வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்
Also Read: பட்ஜெட்டில் ரூ.14.8 லட்சம் கோடி கடன் வாங்கி, 12 லட்சம் கோடி வட்டியா.! ஷாக்கான மக்கள்