Traffic Diversion At Marina: மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்... ஓராண்டுக்கு அமல்..
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நாளை முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரங்களை பார்க்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் கலங்கரை விளக்கம் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இதில், காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த பகுதியை பயன்படுத்த இயலாது. இதன் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நாளை ( 6-ஆம் தேதி) முதல் ஒரு வருடத்துக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”லுாப் ரோடு மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் லைட் ஹவுஸிலிருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
Just In



போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக லைட் ஹவுஸை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
லைட் ஹவுஸில் இருந்து மெரினா பீச் சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்டபகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் யூ - டர்ன் செய்து லைட் ஹவுஸ் வந்தடைந்து, வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
போர் நினைவுச் சின்னத்திலிருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லவிரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் யூ-டர்ன் செய்து இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.
வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக கொள்ளப்படுகிறார்கள்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
AIADMK: மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு.. தீர்மானம் நிறைவேற்றம்