காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாம்கோ  மற்றும் டாப்செட்கோ  கடனுதவி  திட்டம் 2022-23  குறித்து  நடைபெறும் சிறப்பு முகாம்களில் தகுதி வாய்ந்த அனைத்து பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்களும் கடன் உதவி கோரி விண்ணப்பித்து பயனடையுமாறு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி கூறினார்.

 


பல்வேறு கடன் திட்டங்கள்

 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக  கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர்மக்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக  கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 



 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோகடன் திட்டம் ஆகிய  கடன் திட்டங்கள வழங்கப்பட்டு வருகிறது. மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், மற்றும் கறவை மாடு கடன் திட்டம் ஆகிய  கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

சிறப்பு முகாம்கள்

 

மேற்படி திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வட்டங்களில் பின்வரும் தேதிகளில் நடைபெறவுள்ளது.

 

20.01.2023 வெள்ளிக்கிழமை, வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் 

 

23.01.2023 திங்கள் கிழமை, வட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத்

 

24.01.2023 செவ்வாய் கிழமை, வட்டாட்சியர் அலுவலகம், திருப்பெரும்புதூர்

 

25.01.2023 புதன் கிழமை, வட்டாட்சியர் அலுவலகம், குன்றத்தூர்

 

27.01.2023 வெள்ளிகிழமை, வட்டாட்சியர் அலுவலகம், உத்திரமேரூர்

 

 

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 



 

கடன் மனுக்களுடன் விண்ணப்பதாரரின் சாதிச் சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் /திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate), கல்வி கட்டணங்கள் செலுத்திய இரசீது/செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு முகாம்களில் தகுதி வாய்ந்த அனைத்து பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்களும் கடன் உதவி கோரி விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.