செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி பகுதியில் திடீரென ராட்சத கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த பல பொதுமக்களுக்கு ஆச்சரியம், இப்படி எல்லாம் கார் இருக்கிறதா என ஆர்வத்துடன் அதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அந்த கார் திடீர் என புறப்பட்டு செல்லத் தொடங்கியது. இதை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய செல்போன்களில் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். 


ராட்சத கார்


அந்த ராட்சத கார் பற்றி பொதுமக்கள் விசாரித்த பொழுது, நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படம் நடிகையர் திலகம். இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார்.‌ அவரின் அடுத்த படமான ‌ பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் திரையரங்கில் வெளிவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்துமத கடவுளான விஷ்ணு பத்து அவதாரங்களை எடுப்பார் என்பது புராண  நம்பிக்கை.


 




இதுவரை 9 அவதாரங்களை எடுத்து இருப்பதாகவும் பத்தாவது அவதாரம் கல்கி அவதாரத்தை எடுக்க உள்ளதாகவும் நம்பப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில், மகாபாரதக் கதையையும் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி பட கதையையும் இணைத்து  பிரம்மாண்டமாக கல்கி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


புஜ்ஜி கார் 


இந்தத் திரைப்படத்தில் புஜ்ஜி என்ற கார் பயன்படுத்தப்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புஜ்ஜி கார் , திரைப்படத்தை புரொமோட் செய்யும் விதமாக  பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக சாலைகளில் வலம் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


 




 


6000 கிலோ எடை


திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் அல்லது செட் போட்டு இது போன்ற பிரம்மாண்ட கார்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் நாம் நேரில் கண்டிராத ஒரு பிரம்மாண்ட காரை அதுவும் நிஜ சாலையில் ஓடக்கூடிய கண்டிஷன் உடன் உருவாக்கி உள்ளனர். இந்த காரை முழுமையாக உருவாக்க இரண்டு ஆண்டுகள் எடுத்ததாக அதை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புஜ்ஜி காரின் விலை மட்டும் 8 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கூறுகின்றனர். இதன் பவர் 94kW. 9800 Nm டார்க். இந்த கார் சுமார் 6000 கிலோ எடை இருக்கும் என கூறப்படுகிறது.  


 




இந்தத் திரைப்படத்தில் புஜ்ஜி காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், பின்னணி குரல் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புஜ்ஜி காரை டோலிவுட் நடிகர் நாக சைதன்யா ஓட்டி பார்த்த நிலையில், அடுத்ததாக இந்தியாவின் எஃப் ஒன் கார் ரேசர் நரேன் கார்த்திக் இந்த காரை ஓட்டிப் பார்த்துள்ளார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி கார் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.



செங்கல்பட்டில் தென்பட்ட கார் 


இந்தநிலையில் தான் ப்ரோமோஷன் ஒரு பகுதி ஆக சென்னை புறநகர் பகுதியில் உள்ள செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி பகுதியில், புஜ்ஜி மக்கள் பார்வைக்காக கொண்டுவரப்பட்டு அந்த கார், மக்கள் முன்னிலையில் ஓட்டியும் கட்டப்பட்டது. தற்பொழுது இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜூன் 27ம் தேதி திட்டமிட்டபடி கல்கி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புஜ்ஜி அண்ட் பைரவா என ஒரு அனிமேஷன் சீரிஸும் வெளியாகிறது. அதன் மூலம் படத்துக்கு ஒரு நல்ல புரமோஷன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 


Car loan Information:

Calculate Car Loan EMI