• வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது
  • சென்னை அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவிழக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
  • நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
  • சென்னையில் அதிகனமழைக்காக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் வெள்ளம்
  • கடந்த நான்கு தினங்களாக பெய்து வரும் கனமழையால் சென்னையின் சாலைகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாத அவலம்
  • சென்னையின் பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுககுள் புகுந்ததால் மக்கள் அவதி
  • சென்னையில் தேங்கிய மழைநீரை இரவிலும் அகற்றும் பணி தீவிரம்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது மெரினா, பட்டினம்பாக்கம் கடற்கரைகளில் அபாயத்தை உணராமல் குவிந்த பொதுமக்கள்
  • சென்னையில் 10 சுரங்கப்பாதைகளில் முழுவதும் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்
  • தமிழ்நாடு முழுவதும் பெய்த கனமழையால் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் மூழ்கியதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
  • டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்ததை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் இன்று ஆய்வு
  • தமிழ்நாட்டில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிர்காப்பீடு செய்யலாம்
  • விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
  • தமிழ்நாட்டில் புதியதாக நேற்று ஒரே நாளில் 820 பேருக்கு கொரோனா
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழப்பு
  • உலககோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
  • முதன்முறை சாம்பியன் ஆவதற்காக உலககோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளது.

    மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

    ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

    பேஸ்புக் பக்கத்தில் தொடர

    ட்விட்டர் பக்கத்தில் தொடர

    யூடிபில் வீடியோக்களை காண