ECR Thiruvanmiyur to Uthandi Elevated Corridor: தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க 2100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை - Chennai ECR Road
சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில், குடியிருப்புகளும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையின் மிக முக்கிய சாலைகளின் ஒன்றாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையை சுற்றி குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள 11 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 4 வழிச்சாலையாக உள்ள நிலையில், தற்போது 6 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, 6 வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
திருவான்மியூர் to உத்தண்டி மேம்பால சாலை
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்ட சாலை அமைப்பதற்காக ரூபாய் 2,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் வெளியிட்டுள்ளார்.
சிறப்பம்சங்கள் என்ன? Key Features Of Thiruvanmiyur to Uthandi Elevated Corridor
தற்போது இந்த சாலையில், 17 இடங்களில் சிக்னல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகிறது. உயர்மட்ட மேம்பாலம் அமைந்தால் 10 நிமிடத்தில் செல்ல முடியும். அதேபோன்று இந்த மேம்பால சாலையில் 5 இடங்களில், வாகனங்கள் உள்ளே செல்லவும் வெளியே ஏறவும், பிரத்தேக வழிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.