சென்னை ஈசிஆரில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் சென்டர் ஆக்சிஸ் விளையாட்டில் பெண்கள் மீது இரும்பு கப் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பொழுதுபோக்கு பூங்கா:
காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காடு அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது, இந்த பூங்காவில் தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் இந்த பூங்காவிற்கு தினமும் வந்து செல்வர்.
இதையும் படிங்க: TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! ”யாரையும் அவமதிக்கவில்லை” - அமைச்சர் தங்கம் தென்னரசு
தலையில் விழுந்த இரும்பு கப்:
இந்த நிலையில் அந்த பூங்காவில் உள்ள கேரிபியன் கிங் எனப்படும் ராட்சத கப்பல் ரைடில் இரண்டு கல்லூரி மாணவிகள் ஏறி அமர்ந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ரைடில் கப்பல் மேலும் கீழும் சென்று கொண்டு இருந்தது அப்போது திடீரென அதில் இருந்த ஒரு ராட்சத இரும்பு கப் ஒன்று அந்த பெண்களின் தலையில் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் காயமடைந்த பெண்களின் தலையிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்து ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
வைரலான வீடியோ:
பெண்கள் மேல் இந்த இரும்பு கப் விழும் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் பூங்காவில் உள்ள அனைத்து ரைடுகளிலும் முறையான பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்படுகிறதா என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்த இந்த விபத்து குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.