திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூரைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் அஜித் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் மாரடைப்பு காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமன்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 24 -வது வயதான அஜித் உயிரிழந்துள்ளார்.
அதிகரிக்கும் ஜிம் மரணங்கள்
உடற்பயிற்சி செய்பவர்கள் உயிரிழந்துவிட்டதாக சமீப காலமாக நாம் அதிகமான செய்திகளைக் கேட்டு வருகிறோம்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற மாணிக்கம் என்ற பயிற்சியாளர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
19 வயது மாணவி மரணம்:
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், கபடி விளையாடிய 16 வயது சிறுமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
கடலூரில் ஒருவர் பலி:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடலூரில் நடைபெற்ற கபடி போட்டியின் போது, விமல் எனும் வீரர் ஒருவரைப் பிடிக்க முயன்று அப்படியே கீழே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கேரளாவில் ஒருவர் பலி:
2019-ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது ராதாகிருஷ்ணன் தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
புனித் ராஜ்குமார்:
பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த 2021ம் ஆண்டு உடற்பயிற்சியின் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலியானது அதிர்ச்சியளித்தது. கேகே எனப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மேடையில் பாடும்போதே பலியானது என, திடீர் மாரடைப்பல் ஏற்பட்ட மரணங்கள் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் என்ன?
பொதுவாக, விளையாடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் நாம் அதிகப்படியான ஆற்றலைச் செலவழிப்பதற்கு, ஏற்றாற்போல் இதயமும் செயல்பட வேண்டி உள்ளது. அந்த சூழலில் இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். இதயத்துடிப்பு தொடர்ச்சியாக வேகமாக இருக்கையில், ஒருவேளை இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து கவனிக்காமல் விட்டிருந்தால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ வாய்ப்புண்டு.
ஜிம் செல்லும் ப்ளான் இருக்கா?
நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:
உடற்பயிற்சிக்காக ஜிம் செல்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து இருந்தால் தான் உடல் எடை சீராக இருக்கும். அன்றாடம் 8 முதல் 10 க்ளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.
கார்போஹைட்ரேட் உணவை முற்றிலுமாக தவிர்க்காத்தீர்கள்
அதிகாரப்பூர்வ ஆராய்ச்சிகளின்படி, கார்போஹைட்ரேட் குறைவான உணவுமுறை என்பது, தினசரி அளவில் 130 கிராமுக்கும் குறைவான அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதாகும். ஆனால் பலரும் ஜிம் செல்ல ஆரம்பித்தால் கார்போஹைட்ரேட் உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர்.
புரதச்சத்து அவசியம்:
உணவில் புரத சத்து நிறைந்திருப்பது முக்கியமான ஒன்றாகும். நம் உடலில் ஒவ்வொரு செல்லும், திசுக்களும், சதையும், ரத்தமும் புரதத்தினால் ஆனது. உங்கள் ஹார்மோன், என்சைம், நோய் எதிர்ப்பு செல்களும் உருவாக அடிப்படை தேவை புரதமே. புரத சத்து சரியான அளவு இருந்தால் மட்டுமே நம்மால் இயங்க முடியும்.
ஆனால் சமீப காலமாக ஜிம், ஒர்க் அவுட், ப்ரோட்டீன் ட்ரிங் என்பதெல்லாம் ரொம்பவே பிரபலமாகிவிட்டது. அதிகமான அளவில் புரதத்தை உட்கொண்டால் அது பல்வேறு உபாதைகளுக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே உணவிலேயே புரதச் சத்தைப் பெற முற்படுங்கள். அதுவும் அளவு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்:
பதப்படுத்திய உணவுகள்' என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள். ``அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள்'' தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள் என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும். இவற்றை அதிகமாக உட்கொண்டால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் வரும்.
உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள்:
எத்தனை டயட் சார்ட் தயார் செய்தாலும் கூட உணவு ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து தேவைப்படும். அதனால் உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் உடல் ஒரு உணவை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள். பசித்தால் மட்டுமே உண்ணுங்கள்.