செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் வீரா (எ) வீராசாமி கடந்த 2021 நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில் அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை இரண்டு பேர் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டதில் வீராசாமி 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வீரா (எ) வீராசாமி மாம்பாக்கம் ஊராட்சியில் சுயேட்சையாக தனித்து நின்று வெற்றி பெற்று பின்பு திமுக கட்சியில் இணைத்துக் கொண்டார்.
மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்.
பின்னர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளில் 40 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிணைந்து மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீரா (எ) வீரசாமி என்பவரை கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாம்பாக்கம் ஊராட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் தொழிற்சாலைகள் என வளர்ச்சி அடைந்து வரும் சூழலில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகின்றது. இதனால் மாம்பாக்கம் ஊராட்சிக்கு பல்வேறு வருவையும் அதிகரித்து வந்துள்ளது.
தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டு காலம் நிறைவடைந்த நிலையில், ஊராட்சி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் உள்பட ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடு செய்வதாக கூறி, ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் மற்றும் துணை தலைவர்களின் செக் பவர் பறிக்கப்பட்டு திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே கணக்கு வழக்குகளை தற்காலிகமாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவருக்கு செக் பவர் நீக்கப்பட்டுள்ளதால் மாம்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் கிடைப்பில் போடப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடு ?
மாம்பாக்கம் ஊராட்சிக்கு அதிக வருமானம் வரக்கூடிய சூழலில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஐந்து வார்டு உறுப்பினர்கள் ஒன்றிணைத்து, ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வண்டலூர் வட்டாட்சியர் முன்னிலையில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் எந்த ஊழலும், முறைகேடுகளும் செய்யவில்லை என வீரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சூழலில், வட்டாட்சியர் முன்னிலையில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒருமனதாக ஊராட்சி மன்ற பதிவிலிருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.
தவெகவில் இணைந்த தலைவர்
அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ தனால் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரா திமுகவில் இருந்து, விலகி விஜய் புதிதாக துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பரபரப்பு குற்றச்சாட்டு
இதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை பதவியில் இருந்து விளக்க வேண்டும் என திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் முயற்சி எடுப்பதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார் வீரா.மேலும் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராவை பதவி நீக்கம் செய்தால் பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து வீராசாமி கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை, மாம்பாக்கம் துணைத்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவசர அவசரமாக என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முயற்சியில் முயற்சித்து வருகின்றனர். விஜய் துவங்கியுள்ள தவெக கட்சியில் இணைத்துக் கொண்டதால் மற்ற ஊராட்சி மன்ற தலைவர்களும் இணைந்து விடுவார்களோ? என்ற அரசியல் உள்நோக்கத்தோடு என்னை பலிகடா ஆக்குகின்றனர் என பரபரப்பை கிளப்பியுள்ளார்.