பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். வழக்கமாக இது போன்ற மின்தடைகள் ஏற்படுவதற்கு முன்பு இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுப்பதும், வழக்கமாக இருந்து வருகிறது.


மின்தடை - Thiruvallur Power Shutdown 


மின்தடை மேற்கொள்ளும்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவும் பணிகள் முடிக்கப்பட்டு மின்சாரம் தரப்படும். அந்த வகையில் நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த காக்களூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்து.


எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் ? Thiruvallur Power Shutdown Tomorrow 


காக்களூர் அவுசிங் போர்டு, காக்களூர் தொழிற் பேட்டை, காக்களூர் கிராமம்,எடப்பாளையம், நேதாஜி சாலை, சி.சி.சி., பள்ளி பின்புறம், பூண்டி,தலக்காஞ்சேரி. திருவள்ளுர் நகரத்தில் ஜே.என்.சாலை, பெரும் பாக்கம், ஜவஹர் நகர், புல்லரம்பாக்கம், ஐ.சி.எம்.ஆர்., பின்புறம், எம்.ஜி.எம்., நகர், கொண்டமாபுரம், சத்தியமூர்த்தி தெரு, சி.வி. நாயுடு சாலை, செவ்வாய் பேட்டை, ஒதப்பை, தண்ணீர்குளம், என். ஜி.ஓ.,நகர், ஈக்காடு, ஒதிக்காடு, வி.எம்.நகர், ஜெயா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை எனவே பொதுமக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என மின்துறை அலுவலர்கள், கேட்டுக் கொண்டுள்ளனர். 


வேறு எந்த பகுதிகளில் மின்சார தடை ஏற்பட உள்ளது ?


என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், அம்மையார் குப்பம் தெற்குபகுதி, கதனநகரம், ஜனகராஜகுப் பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துார், பெருமாநல்லுார், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, வீரமங்கலம், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, கர்லம்பாக்கம், கே.ஜி.கண்டிகை, செருக்கனூர், புச்சிரெட்டிப் பள்ளி, வெங்குபட்டு, கோரமங்கலம், மதுராபுரம், சாணாகுப்பம், நெடியம், கொளத்துார்,மேலப்பூடி, அம் மனேரி, கொண்டாபுரம், கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, சிறுகுமி, எஸ்.அக்ரஹாரம், அம்மனேரி, கொண்டாபுரம், பூனிமாங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன ?


மின்தடை ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் மின்னணு சாதனங்களை, பயன்படுத்தி செய்ய வேண்டிய வேலைகளில் முன்கூட்டியே செய்து முடித்து விட வேண்டும். செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு முன்கூட்டியே முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். சமையலுக்கு பயன்படும் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களின் தேவையை மின் செய்யப்படுவதற்கு முன்பாகவே செய்து முடித்து விட வேண்டும்.