கேளம்பாக்கம் வீராண சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்களை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பாலாஜி ஒரு மணி நேரமாக போக்குவரத்து நெரிசலை  சரி செய்து,  தினமும் அவ்விடத்தில் காவலர்கள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

போக்குவரத்து நெரிசல்

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் வீராணம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி போக்குவரத்து நெரிசலை சரி செய்தார்.

 


யாரையா இவரு..! டிராபிக்கை கிளியர் செய்த எம்எல்ஏ..! செம சம்பவம் போங்க..!


 

பொது வீராணம் சாலை 

 

தினமும் காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் ஓஎம்ஆர் சாலையாக வந்து வீராணம் சாலையை பயன்படுத்தி வண்டலூர் வழி சாலை வழியாக செல்கின்றனர். பொது வீராணம் சாலை மற்றும் தையூர் மார்க்கெட் சாலை இணையும் நான்கு வழி பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.

 


யாரையா இவரு..! டிராபிக்கை கிளியர் செய்த எம்எல்ஏ..! செம சம்பவம் போங்க..!


 

பொதுமக்களிடையே வரவேற்பு 

 

இந்நிலையில், அந்த வழியாக வந்த எம்.எல்.ஏ பாலாஜி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்களை சரி செய்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து கூடுதலாக தினமும் இந்த இடத்தில் காலை நேரத்தில் காவல் துறையினர் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.