நடிகை சோனா வீட்டில் கத்தியோடு  திருட முயன்ற நபர்கள்


தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா. இவர் ஷாஜகான் ,  குசேலன் ,மிருகம்  என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


கோலிவுட் படங்களில் தனது சிறந்த குத்தாட்ட பாடல்களால் புகழ் பெற்றாவர் பிரபல  நடிகை சோனா. இவர் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28 வது தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


கத்தியை காட்டி மிரட்டல்


இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்து வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களை பார்த்து குறைத்துள்ளது.


நாய் குறைக்கும் சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்து அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். அவர்களைப் பார்த்து நடிகை சோனா கூச்சலிடவே மர்ம நபர்கள் ஒளித்து வைத்திருந்த கத்தியை  காட்டி மிரட்டி உள்ளனர்.


இதில் கத்தியை காட்டி மிரட்டும் போது சோனா தப்பி செல்ல முயன்ற போது கீழே விழுந்ததில் காலில் சுளுக்கு மற்றும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திருட்டுச் சம்பவத்தில்  ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சோனா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கத்தியை காட்டி மிரட்டி  சென்ற நபர்கள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பிரபல நடிகையின் வீட்டில் திருட முயன்ற  திருடர்கள் நடிகையை கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..