TANUVAS Walk in Interview:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ( Tamil Nadu Veterinary and animal Sciences university ) கீழ் செயல்படும்
'Madras Veterinary கல்லூரியில் உள்ள திட்ட உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு நாளை (30/08/2023) நேர்காணல் நடைபெறுகிறது.
'Madras Veterinary College' கால்நடை பயோடெக்னாலஜி துறையில் '"Surveillance, Molecular characterization and development of vaccine candidate for Porcine Parvovirus" என்ற திட்டத்தில் உதவியாளராக பணியாற்ற தகுதியானவர்கள் இதன் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி விவரம்:
திட்ட உதவியாளர்
பணியிடம் : சென்னை
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கால்நடை அறிவியல் / பி.டெக்., பி.எஸ்.சி., பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மாலிகுலர் பயோலஜி ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டம் / Life Science பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விலங்கியல் செல் அறிவியல், மாலிகுலர் லேப் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் இருந்தால் நல்லது.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு வயது வரம்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து அதனை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
The Professor and Head
Department of Animal Biotechnology
Faculty of Basic Sciences
Madras Veterinary College Campus
Chennai - 600 007
இ.மெயில் : hodabtmvc@tanuvas.org.in
இணையதள முகவரி : www.tanuvas.ac.in
நேர்காணல் நடைபெறும் நாள்: 30.08.2023 காலை 10.00 மணி
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1691658589.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.