தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 


சென்னையில் மழை:


சென்னையில் சுமார் 7 மணியிலிருந்து இடியுடன் கூடிய மழையானது பெய்து வருகிறது.  சென்னையில் உள்ள அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, அரும்பாக்கம், அண்ணா நகர், சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, மதுரவாயல், வானகரம், முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழையானது பெய்து வருகிறது. 


வானிலை மையம் தெரிவித்துள்ளது என்ன?



அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம்,அயனாவரம்,தாம்பரம்,திருவொற்றியூர்,வண்டலூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்வோர், முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் .


வானிலை நிலவரம்:


நாளை, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி,    ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


ஜூன் 8 ஆம் தேதி, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில், தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:


06.06.2024 முதல்  10.06.2024 வரை: அதிகபட்ச     வெப்பநிலை,    தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் / இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 9, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 8, பெருங்களூர் (புதுக்கோட்டை), பாலக்கோடு (தர்மபுரி), மிமிசல் (புதுக்கோட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), திருமங்கலம் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 7, பெலாந்துறை (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம்  (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), கரூர் (கரூர்), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), அன்னவாசல் (புதுக்கோட்டை) தலா  6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


தமிழக கடலோரப்பகுதிகள்:


06.06.2024 முதல் 10.06.2024 வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார்  வளைகுடா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


வங்கக்கடல் பகுதிகள்:


06.06.2024: தென்மேற்கு  மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின்  வடக்குபகுதிகள், மத்திய வங்கக்கடலின்  தெற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


07.06.2024: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


08.06.2024 முதல் 10.06.2024 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்:


07.06.2024 முதல் 10.06.2024 வரை: கேரள -   கர்நாடக கடலோரப்பகுதிகள்   மற்றும்    லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.