சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. 


சென்னையில் மழை


சென்னை வடபழனி, சாலிகிராமம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேலையூர், ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாரம், ஆயிரம் விளக்கு, இராயப்பேட்டை, மயிலாப்பூர், மீஞ்சூர்,பட்டினப்பாக்கம், எழும்பூர், அண்ணா சலை, புதுப்பேட்டை, தாம்பரம்,  உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தப் பகுதிகளில் மாலை 3.30 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மழை மாநகரை குளிர வைத்துள்ளது. 


அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்


திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திண்டுக்கல், கோவை ஆகிய பகுதிகள் அடுத்த 2 மணி நேரத்திற்கு லேசானது மிதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும். 


நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 
நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.


தேனி, மதுரை, திருப்பூர், விருதுநகர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வரும் ஜூன் 7 ஆம் தேதி, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


08.06.2024 முதல்  11.06.2024 வரை: தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.