தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூர் (நீலகிரி) - 14 செ.மீ., தேவாலா- 13 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை) - 7 செ.மீ., வால்பாறை (கோவை), அவலாஞ்சி (நீலகிரி) - தலா 6 செ.மீ., சோலையாறு - 5 செ.மீ , கூடலூர் பஜார் (நீலகிரி), சின்கோனா (கோவை) - தலா 4 செ.மீ., நடுவட்டம் (நீலகிரி) - 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


 






நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம்  ஏற்கெனவே தெரிவித்திருந்தது.


 






 






சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






காற்றழுத்த தாழ்வு மண்டலம்:


முன்னதாக வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் நேற்று (செப்.10) எச்சரித்திருந்தது.


 






ஆந்திர கடலோர பகுதிகளையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மணடலமாக வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.