கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக முதன்முறையாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி தொகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.




இந்த நிலையில், தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் தி.மு.க.வினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக “உதய் அண்ணா”  என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.






இந்த செயலியை உதயநிதி ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும், தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உதவி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த உதவி எண் 9176991768 ஆகும்.




இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை இணையம் வாயிலாக கேட்டறிந்து விரைந்து தீர்வு காண்பதற்காக உதய் அண்ணா செயலி மற்றும் உதவி எண்ணை கழகத் தலைவர் முதலமைச்சர் பிறந்தநாளான இன்று அறிமுகம் செய்து வைத்தோம்.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க : மீனவர் சமுதாயத்திற்கு செல்லும் தூத்துக்குடி துணை மேயர் பொறுப்பு - ஜெனிட்டா VS நிர்மல்குமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண