கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ருக்மணிதேவி கல்லூரியில் எழுந்த பாலியல் புகார்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அதன் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி விசாரணை நடத்தினார்.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய விசாரணை சற்று முன்பு முடிவடைந்தது.கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் மகளிர் ஆணையத்தில் விசாரணை நிறைவடைந்துள்ளது. கலாஷேத்ரா நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்துமாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமரி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், பாலியல் புகார் சுமத்தப்பட்ட்ட பேராசிரியர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக என்னென்ன புகார்கள் வந்துள்ளது என்பது தொடர்பாக விவரத்தை கலாஷேத்ரா இயக்குனரிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, கலாஷேத்ராவில் குறைத்தீர் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் இதுவரை புகார்கள் ஏதும் வரவில்லை என கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாகவது:
’கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும். மாணவிகளுடன் தொடர்பில் உள்ளேன். அவர்களை நேரிலும் சந்திப்பேன். பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். புகார்கள் ஆன்லைன் மூலமும் வந்துள்ளன. புகார்கள் மற்றும் ஆய்வு அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்படும். ஆதாரத்தின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஐசிசி கமிட்டியின் ஆவணங்களை கேட்டுள்ளேன். கலாஷேத்ராவில் புகார் பிரிவு இயங்கியது குறித்து எந்த ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..
Kalakshetra Row: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்.. நடனப் பேராசிரியர் ஹரிபத்மன் கைது..
இதையும் படிக்க..