10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை நாளை பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளபடி, ''நடைபெறவுள்ள மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த  தேர்வர்கள் நாளை 22.04.2022 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 2 மணி முதல் என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


10ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யும் முறை:
 
தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று  “HALL TICKET” என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “SSLC PUBLIC EXAMINATION MAY 2022 - HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது USER ID மற்றும் PASSWORD-ஐப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


மேலும்‌, மே 2022 பத்தாம்‌ வகுப்பு பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியலில்‌ பள்ளி மாணவ / மாணவிகளின்‌ பெயர்‌, பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள்‌ ஏதும் இருப்பின்‌, சம்பந்தப்பட்ட தேர்வு மையக் கண்காணிப்பாளர்களை அணுகி, தேர்வு மையத்திற்கான பெயர்ப் பட்டியலில்‌ உரிய திருத்தங்கள்‌ மேற்கொள்ளலாம். 


இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்‌ / முதல்வர்களிடம்‌ அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் ‌கல்வி அலுவலர்களையும்‌ கேட்டுக் கொள்கிறேன்‌’’.


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். 


இதேபோல, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளைப் பள்ளிகள், நாளை பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகள் http://dge.tn.gov.in இணையதளத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, மே மாதம் நடைபெற உள்ள 10-ம் வகுப்புத் தேர்வை எழுதும் தனித் தேர்வர்கள் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண