10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்புப் பணிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகளை நியமித்துப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


கொரோனா தொற்றுப் பரவல் பெருமளவு குறைந்துள்ள நிலையில், மே மாதத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்புப் பணிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகளை நியமித்துப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மட்டும் ஒரே அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பு


1. மாநிலத் திட்ட இயக்கக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இரா.சுதனுக்கு தூத்துக்குடி மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.


2. டி.மணிகண்டன், நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - கோயம்புத்தூர்


3. க.இளம்பகவத், இஆப., சிறப்பு பணி அலுவலர், இல்லம் தேடிக் கல்வி - தேனி


4. சா.சேதுராமவர்மா, இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்ககம் -சென்னை


5. க.அறிவொளி, இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம் - செங்கல்பட்டு


6. வி.சி.இராமேஸ்வரமுருகன், கூடுதல் திட்ட இயக்குநர் 1,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை- காஞ்சிபுரம்


7. ச.கண்ணப்பன்,செயலாளர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்- திருச்சி


8.த.உமா, உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்- இராணிப்பேட்டை


9.மு.பழனிசாமி, உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் - விழுப்புரம்


10.அ.கருப்பசாமி, இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் - வேலூர்


11.ந.லதா -இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- திருவள்ளூர்


12.சு.நாகராஜ முருகன், கூடுதல் திட்ட இயக்குநர் 2 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட இயக்ககம் - திண்டுக்கல்


13. பெ.குப்புசாமி, இயக்குநர் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் - சேலம்


14. ச.உமா, இணை இயக்குநர் - 11 மாநில திட்ட இயக்ககம். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - மயிலாடுதுறை


15.முனைவர் பூ.ஆ.நரேஷ், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) பள்ளிக் கல்வி ஆணையரகம் - கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்


16.கே.சசிகலா, இணை இயக்குநர் (நிர்வாகம்), தொடக்கக்கல்வி இயக்ககம் -அரியலூர்


17.சி.செல்வராஜ், இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு), பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை- சிவகங்கை


18. ச.சுகன்யா, கூடுதல் உறுப்பினர் (இ.இ.நிலை) ஆசிரியர் தேர்வு வாரியம் - கள்ளக்குறிச்சி


19.கஸ்ரீதேவி, இணை இயக்குநர் (பாடத் திட்டம்) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- தர்மபுரி


20. சி.அமுதவல்லி, இணை இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்- விருதுநகர்




21. ஆர்.பாஸ்கரசேதுபதி, இணை இயக்குநர்-111 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி. மாநில திட்ட இயக்ககம் - மதுரை


22. கே.செல்வகுமார்,. இணை இயக்குநர் (இடைநிலை) அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தஞ்சாவூர்


23. பொ.பொன்னையா, கூடுதல் உறுப்பினர் (இஇ நிலை), ஆசிரியர் தேர்வு வாரியம் - புதுக்கோட்டை


24.வை.குமார், இணை இயக்குநர் (பயிற்சி), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - திருவண்ணாமலை


25. பி.குமார், இணை இயக்குநர் (மேல்நிலை); அரசுத் தேர்வுகள் இயக்ககம் நாமக்கல்


26.த.ராஜேந்திரன், இணை இயக்குநர் (நிர்வாகம்) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- ஈரோடு


27. நா.ஆனந்தி, இணை இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்- கரூர்


28.எம்.வாசு. இணை இயக்குநர், மாநில திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- திருப்பூர்


29.ச.கோபிதாஸ், இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) பள்ளிக் கல்வி ஆணையரகம் - கடலூர்


30.வெ.ஜெயக்குமார், இணை இயக்குநர் (தொழிற்கல்வி) பள்ளிக்கல்வி ஆணையரகம்- திருநெல்வேலி


31.எம்.இராமசாமி, இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி), பள்ளிக் கல்வி ஆணையரகம் - பெரம்பலூர்


32.எஸ்.சாந்தி, இணை இயக்குநர் (உதவி பெறும் பள்ளிகள்), தொடக்கக் கல்வி இயக்ககம் -நாகப்பட்டினம்


33. ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி. துணை இயக்குநர் (சட்டம்) தொடக்கக்கல்வி இயக்ககம் - திருவாரூர்


34.வி.வெற்றிசெல்வி, துணை இயக்குநர் (நிர்வாகம்) தொடக்கக்கல்வி இயக்ககம்- ராமநாதபுரம்


35. க.குணசேகரன், துணை இயக்குநர் (மின்ஆளுமை) பள்ளிக் கல்வி ஆணையரகம் - தென்காசி


36.குணசேகரன், செயலாளர். தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - நீலகிரி


37.ஆ.அனிதா, துணை இயக்குநர்,ஆசிரியர் தேர்வு வாரியம்- கன்னியாகுமரி


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.