நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மொத்தம் 138 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடாமல் சான்றிதழ் வழங்குவதற்காக ஏபிபி நாடு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையிலேயே  நாம் கள ஆய்வு மேற்கொண்டோம்.  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த இந்திரா என்ற மூதாட்டி உயிரிழந்தார். அவருக்கு இடைத்தரகர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் மூலமாக சான்றிதழ் பெற முயற்சி செய்தோம்.



 

பல இடங்களில் முன்பு இவ்வாறு நாங்கள் செய்து கொண்டிருந்தோம் என தெரிவித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்தனர். இருந்தும் தொடர்ந்து பல இடங்களில் முயற்சி செய்ததில் 3 இடத்தில் ஆதார் எண்  இருந்தால் போதும் தருகிறோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கள ஆய்வை மேற்கொண்டு அந்த மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தோம். அப்போது அவர்கள் ஆதார் எண் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் உங்களுக்கு சான்றிதழ் வரும் என தெரிவித்தனர். அதேபோல் மறுநாள் நமக்கு சான்றிதழ் வந்ததற்கான மெசேஜ் வந்தது அதில் இருந்து தற்பொழுது சர்டிபிகேட் டவுன்லோட் செய்து கொண்டோம். இதனைத் தொடர்ந்து முதலில் பேசிய பல இடங்களில் மீண்டும் அழைப்பு வந்தது நாங்கள் தற்போது ஊசி போட்டு தருகிறோம் நீங்கள் குறிப்பிட்ட தொகை தாருங்கள் எனவும் தெரிவித்தனர்.  

 


 

குறிப்பாக காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் தடுப்பூசி அனைத்து தொழிற்சாலைகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு சில சுகாதாரத்துறை ஊழியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊழியர்களுக்கு தற்போது குறிப்பிட்ட காலத்திற்குள் இவ்வளவு ஊசி போட வேண்டும் என உத்தரவிடுவது ஆளும் ஆதார் எண் ஏதாவது கிடைத்தால் அதற்கு தடுப்பூசி போட்டதுபோல் சான்றிதழ் குடும்பத்திற்கும் அவர்கள் தயாராக இருப்பதால் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நற்செய்தி நமது இணைய தளத்திலும் யூடியூப் பக்கத்திலும் வெளியானது.

 

இது தமிழக அரசின் கவனத்திற்கு சென்ற பிறகு தமிழக அரசு போலியாக கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இதுவரை 3 நபர்களுக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டம் முழுவதும் இதுபோன்ற போலியாக கொரோனா சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.