அம்பத்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவலர்கள் வார விடுப்பு பதிவேட்டை ஆய்வு செய்தார். சென்னை ஆவடி மாநகர காவல், அம்பத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவடி நரிக்குறவர் காலனி பகுதியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்ட முதலமைச்சர் திடீரென அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



 

சட்டம் ஒழுங்கை ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவலர்கள் வார விடுப்பு பதிவேடு மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவேட்டை ஆய்வு செய்தார். மகப்பேறு விடுப்பில் சென்றுள்ள பெண் காவலர் புவனேஸ்வரி அவர்களின் விடுப்பு தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். மற்றும் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள்  கைதிகளின் அறையை உள்ளிட்டவை ஆய்வு செய்தார்.