தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு மகத்தான திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் இயங்கும் இந்த அம்மா உணவகங்களை தினசரி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஒரு கோடியளவிற்கு மக்கள்தொகையை கொண்ட சென்னை மாநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.




இந்த நிலையில், கடந்த 9-ந் தேதியான சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் சென்னை மாநகரம் முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பலரும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளத்தில் அவதிப்பட்டு வரும் மக்களின் நலன்கருதி, அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.


இந்த நிலையில், சென்னையில் கனமழையின் தாக்கம் குறைந்து பல பகுதிகளிலும் சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்துள்ளது. சென்னையில் மிகவும் குறைந்த அளவிலான பகுதிகளில் மட்டுமே இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. அவற்றை அகற்றும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்களும், தூய்மை பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக பதவிவகித்தபோது, கடந்த 2013ம் ஆண்டு அம்மா உணவகம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மலிவுவிலையில் உணவுகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த உணவகங்கள் தொடக்கத்தில் சென்னையில் தொடங்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.


அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், முக்கிய சந்திப்புகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் என்று மாநிலம் முழுவதும் பரவலாக உள்ள அம்மா உணவகங்களில் காலையில் இட்லி ரூபாய் 1-க்கும், பொங்கல் ரூபாய் 5-க்கும், மதிய வேளையில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம், தயிர்சாதம் தலா 5 ரூபாய்க்கும், இரவு நேரங்களில் சப்பாத்தி 1 தலா ரூபாய் 1க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்காரணமாக பலரும் அம்மா உணவகங்களில் பெரிதும் சாப்பிடுகின்றனர்.


மேலும் படிக்க : Surya Jaibhim | நிஜ செங்கேணி ’பார்வதி அம்மாளுக்கு’ செய்த மரியாதை.. அடுத்தடுத்து அதிரடி செய்யும் சூர்யா...


மேலும் படிக்க : NZ vs AUS, Final Match Highlights: தொடரும் நியூசி., சோகம் ; முதல் டி-20 உலகக்கோப்பையை வென்று ஆஸி., அசத்தல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண