Tambaram New Bus Stand: GST சாலையில் இனி NO டிராபிக்.. தாம்பரத்தில் வருகிறது புதிய பேருந்து நிலையம்!!

Tambaram New Bus Stand: சென்னை தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது.

Continues below advertisement

Tambaram Bus Stand: "சென்னை தாம்பரத்தில் ரூ.6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம் அமைய உள்ளன"

Continues below advertisement

சென்னையின் நுழைவு வாயில் தாம்பரம்

சென்னையின் நுழைவு வாயிலாக விளங்கும் தாம்பரம், தினமும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை கையாளுகிறது. சென்னை புறநகரில் இருக்கும் மக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் தாம்பரம் வந்து செல்கின்றனர். தாம்பரம், சமீப காலமாக கடும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. 

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக, நிழற்குடைக்குள் பேருந்துகள் செல்வதற்கு தூண்கள் இடையூறாக உள்ளதால், ஜிஎஸ்டி சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்ன?

தாம்பரத்திற்கு 40% மக்கள் பேருந்து மூலமாக வந்து செல்கின்றனர். இதனால் தாம்பரத்தில் உள்ள மேற்கு மற்றும் கிழக்கு பேருந்து நிலையங்களில், எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தாம்பரத்தில், குரோம்பேட்டை மார்க்கமாக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நின்று செல்ல வசதியாக, சுமார் 350 அடி நீளத்திற்கு இரண்டு பகுதிகளாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெருங்களத்தூரில் பகுதியில் இருந்து தாம்பரம் வரும் பேருந்துகள், நேரடியாக இந்த நிழற்குடைக்குள் செல்ல முடியாமல் சற்று இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டி உள்ளது. அவ்வாறு செய்வதால் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்தின நெரிசல் படிப்படியாக ஏற்படுகிறது. தினமும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வந்த நிலையில், போக்குவரத்து போலீசார் ஆராய்ந்த போது நிழற்குடையின் இரும்பு தூண்கள் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. 

தாம்பரம் புதிய பேருந்து நிலையம் - Tambaram New Bus Stand 

எனவே இடையூறாக இருக்கும் இரும்பு தூண்களை அகற்றி பேருந்துகள் நேராக செல்லும்படி, பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என காவல்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையை சி.எம்.டி.ஏ கையில் எடுத்தது. தற்போது உள்ள நிழற்குடையை அகற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. 

இந்த புதிய பேருந்து நிறுத்தத்தில் ஒருபுறத்தில் மட்டும் தூண்கள் கொண்ட புதிய நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து நிழற்குடை நீட்டப்பட்டு பேருந்து நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்படும். அவ்வாறு செய்யப்படுவதால் தற்போது உள்ள வலது புறத்தூண்கள் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு செய்வதால் பேருந்துகள் இடது புறமாக காத்திருந்து, இடது புறமாக திரும்ப வேண்டிய சூழல் இருக்காது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். இதனால் இப்பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைய உள்ளது.

தாம்பரம் பேருந்து நிலையம் திட்ட மதிப்பீடு என்ன? Tambaram New Bus Stand Proposed Value 

தாம்பரம் புதிய பேருந்து நிலையம் சுமார் ரூபாய்,6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் மாநில அரசு பங்கு 2 கோடி ரூபாயும், தாம்பரம் மாநகராட்சியின் பங்கு 4.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நிழற்குடை 28 அகலமும், சுமார் 653 அடி நீளத்திற்கு அமைய உள்ளது. இதற்காக டெண்டர் மார்ச் மாதம் ஏழாம் தேதி கோரப்பட உள்ளது. டெண்டர் விடப்பட்ட தேதியிலிருந்து, 4 மாதத்திற்குள் இந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?

Continues below advertisement