சென்னையில் இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்ப்பட்டதால் மதுபோதையில் கறி வெட்டும் கத்தியால் , மனைவி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

இரண்டாவதாக திருமணம்

நேபாளம் மாநிலத்தை சானியா யாதவ் ( வயது 35 ) கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சுனில் குமாரை இரண்டு  ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தார். பின்பு , மகள் டோலி ( வயது 10 ) மகன் தேவ் ( வயது 7 ) ஆகியோருடன் தனியாக வசித்து வந்த நிலையில் , மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சன்பக பஹதூர் ( வயது 36 ) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து பேச்சு

குடும்பத்துடன் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உமா சங்கர் ( வயது 38 ) என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். தினசரி சானியா யாதவ் கணவரை வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இதே சண்டை தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கணவர் , மதுபோதையில் கறி வெட்டும் கத்தியால் , மனைவியின் வயிற்றிலும் , கையிலும் குத்தியுள்ளார். சானியா யாதவ்வின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ஓடி வந்து பார்த்த போது கணவர் குத்தியதில் , மனைவி துடிதுடித்து இறந்ததை பார்த்துள்ளார். கோட்டூர்புரம் போலீசார் உடலை மீட்டு  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் கொலை வழக்கு பதிந்து, கணவர் சன்பக பஹதுார் சர்க்கியை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து , அதே கத்தியால் தன் கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் ( வயது 23 ) பெயின்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பெயின்ட் அடிக்கும் வேலைக்கு சென்ற போது தாம்பரம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் கழுத்து அறுப்பு

அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற செல்வத்தை சிறுமியின் பெற்றோர், சகோதரி ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டு, வீட்டின் வெளியே சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , பலத்த காயமடைந்த செல்வம் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மது பழக்கத்தை நிறுத்தி , வேலைக்கு சென்று திருந்தி வாழ்ந்த நண்பனை தாக்கிய நண்பர்கள் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுமன் ( வயது 40 ) ஆட்டோ ஓட்டுநர். இவரது மூத்த மகன் சுதாகர் ( வயது 18 ) புளியந்தோப்பு சிவராஜபுரம் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் சுதாகர் வந்த போது, சுதாகருக்கும் அவரது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் அஜய் என்பவர் நான்கு பேருடன் சேர்ந்த பீர் பாட்டிலால் சுதாகர் தலையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுதாகர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு ஏழு தையல் போடப்பட்டது. இதுகுறித்து சுதாகரின் தந்தை சுமன் பேசின் பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் , நண்பர்களுடன் மது அருந்தி ஊர் சுற்றி வந்த சுதாகர் சில நாட்களாக திருந்தி உள்ளார்.

வேலை முடித்து வந்த போது, நண்பர் சுதேசி என்பவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சென்றுள்ளார். அப்போது மது அருந்தச் சொல்லிய நண்பர்களுக்கும் சுதாகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் சுதாகரை தாக்கியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சுதாகரை தாக்கிய ஜாய் அஜய் ( வயது 21 ) சுதேசி ( வயது 19 ) மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.