உலக புவி நாளை முன்னிட்டு பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்துகொண்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அவர், காற்று மாசுபாட்டை தவிர்க்க பொதுப் போக்குவரத்தை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், தனித் தனி வாகனங்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


அதோடு, சென்னையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட காற்றில் மாசு அதிகளவில் கலந்திருப்பதாகவும், சென்னை மாசுபட்ட நகரம் என நாம் சொல்ல வேண்டிய துரதிருஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் பேசி வேதனையடைந்தார். வாகனங்களை நிறுத்துவதற்கு மல்டி லெவல் பார்க்கிங் கட்டுவதால் மட்டும், மாசு குறைந்துவிடாது என்றும் அத்தனை வாகனங்களும் பள்ளிகளுக்கு குழந்தைகளை கொண்டுவிடவும், அலுவலகம் செல்லவும் அந்த பார்க்கிங்களில் இருந்து கீழே இறங்கி சாலையில் சென்றுதான் தீரும் என்பதை நாம் சுலபமாக மறந்துவிடுகிறோம் என்றார்.


 


தூய காற்றை சுவாசிப்பது என்பது நம் உரிமை என பேசிய சவுமியா, அதனை அடைவதற்கான ஒத்துழைப்பில் பொதுமக்கள் ஈடுபட்டாகவேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சவுமியா அன்புமணி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு அவர்கள் அணியும் ஆடைகள் காரணம் என்று சொல்வது முட்டாள்தனமான கருத்து என்றும், ஆடைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என தெரிவித்தார். ஆண்கள் மனதில் எழும் வக்கிரமும், இப்படி செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் இல்லாததுமே இதுபோன்ற வன்கொடுமைகள் நிகழ்வதற்கு பிரதான காரணம் என பேசிய சவுமியா அன்புமணி, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஒருவரையும் கூட விடக்கூடாது என்றும் அவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனவும் கொந்தளித்தார்.


மகிளா நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரணை நடத்தி வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய சவுமியா அன்புமணி,