காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில்  கூச்சல் குழப்பம் நிலவியது. வரைவு வாக்கு சாவடி பட்டியல் வழங்குவதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினருக்கு முன்னுரிமை வழங்காததால் மாவட்ட ஆட்சியரிடம் திமுக, அதிமுகவினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

 

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் பணி

 

காஞ்சிபுரம் (Kanchipuram News ): இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் பணி தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரைவு  வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடும் பணி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வரைவு வாக்கு சாவடி பட்டியலை வெளியிட்டு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பிஎஸ்பி, கம்யூனிஸ்ட், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கினார்.

 


வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீட்டு


பிரதான கட்சியினர் குற்றச்சாட்டு 

 

அவ்வாறு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வழங்கிய போது ஆளும் கட்சியான திமுகவிற்கும், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் முன்னுரிமை அளிக்காமல் அருகில், இருந்த அரசியல் கட்சியினரை அழைத்து வரைவு வாக்கு சாவடி பட்டியலை வழங்கியதாக, பிரதான கட்சியினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

 


பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூச்சல் குழப்பம்


 

அதிருப்தி தெரிவித்து வாக்குவாதத்தில் 

 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகளும், அதிமுக நிர்வாகிகளும், மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வாக்குசாவடி பட்டியலை வெளியிட்டது, குறித்து அதிருப்தி தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக மற்றும் திமுகவினுடன் இணைந்து, பாஜகவினரும்  தாங்கள் தேசிய கட்சி என தெரிவித்தனர்.

 


பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூச்சல் குழப்பம்.


 

மாவட்ட ஆட்சியர் சமாதானம்

 

அதற்கு தேசிய கட்சிக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது, மாநில கட்சிகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அதிமுக மற்றும் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் சமாதானம் செய்ததை தொடர்ந்து அரசியல் கட்சியினர் மறைவு வாக்குச்சாவடி பட்டியலை பெற்றுச் சென்றனர்.