காஞ்சிபுரம் (Kanchipuram News): அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு முதல் மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சுமார் பல லட்சம் பேர் அதிமுகவினர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.  

 


காஞ்சிபுரம் கோவிலில் 108 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய அதிமுகவினர்


 

ஶ்ரீபிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோவில் 

 

மதுரை மாநாடு நடைபெறுவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் மாநாட்டை கலந்து கொள்ள பல்வேறு விதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி அருகே உள்ள ஶ்ரீபிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோவிலில் மதுரை மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென பிரார்த்தனை செய்து, 108 தேங்காய் உடைப்பதாக வேண்டுதல் வைத்து தற்போது மதுரை அதிமுக மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

 


காஞ்சிபுரம் கோவிலில் 108 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய அதிமுகவினர்


 

மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததை கொண்டாடும் விதமாக ஶ்ரீபிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் தலைமையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் செய்து மாநாடு வெற்றியைத் தொடர்ந்து நேர்த்திக்கடனாக 108 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.