1 . திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தெற்கு காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, 25க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில், 10 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே, வீரளூர் கிராமத்தில் ஊர் தரப்பைச் சேர்ந்த ஆண்கள் தலைமறைவாக உள்ள நிலையில், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை பெண்களே சடங்குகள் செய்து சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
3. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய அரசு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர்கைது செய்தனர்.மேலும் 3 நபர்களை தேடி வருகின்றனர்.
4. வேலூர் மத்திய சிறையில் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்ட முருகனுக்கு பரோல் கேட்டு அவரது மனைவி நளினி சிறைத்துறை டி.ஐ.ஜிக்கு மனு அளித்துள்ளார்.
5. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கலெக்டர் ஆர்த்தி, முகாமை தொடங்கி வைத்தார். இதேபோல், போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை எஸ்பி சுதாகர் தொடங்கி வைத்தார். இதில் 100 காவலர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி போலீசாருக்கு எடுத்துக்கூறி, முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
6. பிரபல ரவுடி பொய்யாகுளம் தியாகு என்கிற தியாகராஜன் சிறப்பு படை காவல்துறையினரால் அரியானாவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தியாகு காஞ்சிபுரம் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
7. செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை விளக்கும் வகையில் வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8. குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று காலை முப்படை வீரர்கள் மற்றும் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
9. திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் இருந்து வரும் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி.
10. உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு வந்த, 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7.84 லட்சம் ரூபாய் சென்ட்ரலில் பறிமுதல் செய்யப்பட்டது . இது தொடர்பாக தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.