1. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், நகர்ப்புற உள்ளாட்சிகளின் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
2. காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் ஊர் திருவிழா நடத்த அனுமதிக்காததால், கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில் பயணம் செய்ய கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் அவசியம் என பயணிகளிடம் வற்புறுத்தி திருப்பி அனுப்புகிறது.
4. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைத்த போது பெண் சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு விலங்குகள் ஆர்வலர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.
5. ஆம்பூரைச் சேர்ந்த பாஷா அகமது தாபா நடத்தி வருகிறார்.நேற்று மதியம் 2:00 மணிக்கு காரில் வந்த ஆறு பேர் கும்பல், பிரியாணி சாப்பிட்டனர். அப்போது, சென்னா மசாலாவுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.சென்னா மசாலா கொடுக்க தாமதமானதால், ஆத்திரமடைந்த கும்பல் ரகளை செய்து, தாபாவை அடித்து நொறுக்கியது.
6. தமிழகத்தில் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
7. திருவண்ணாமலை அருகே பயிர்களை சேதப்படுத்தியதால் 6 மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
8. திருவண்ணாமலை அருகே கடனை திருப்பி செலுத்தாததால் சர்க்கரை ஆலையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய வந்த, தனியார் நிதி நிறுவன ஊழியர்களை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மேலாளர் ஒருவர், உடலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப்மோகன் (29). இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் சந்தீப்மோகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் பணியாற்றும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில்தான் வைரஸ் தொற்றுக்கு பயந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
10. பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் வாகனங்கள் குறைவாகவே காணப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் 2வது நாளான நேற்று மாலை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.