1. தமிழகத்தில் இன்று நடக்கவிருந்த, மெகா தடுப்பூசி முகாம், 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

2. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் பாலாறு உப வடி நில கோட்டத்தின் கீழ் உள்ள 1022 ஏரிகளில் 149 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 108- ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 89- ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாகவும், 60- ஏரிகள் 50 சதவீதத்திற்கு அதிகமாகவும், 75 ஏரிகள் 25 சதவீதத்திற்கு அதிகமாகவும் நிரம்பி உள்ளன. இதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 57- ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

 


 

3. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று முதல் மூன்று நாட்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

 

4. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மதுவிற்பனை குறைந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அனைத்து பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 450 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

 



 

5. மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

 

 

6. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

 



 

7. நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர், 439 மதிப்பெண்ணும், இன்னொருவர், 410 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

 

8. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதை ஒட்டியுள்ள ஆந்திர மாநில பகுதிகளில் கனமழை பெய்வதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் தரைப்பாலம் சேதம் அடைந்து, சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் 32க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


 

9. லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்த 1.58 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைர நகைகளைத் திரும்ப தரக்கோரி சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய சுற்றுச் சூழல் துறை கண்காணிப்பாளரின் மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

 

 

10. சென்னையில் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட 138 டன் பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி நேற்று அகற்றியது.