1. ஊரக உள்ளாட்சி தேர்தலில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுக்கும் விதமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 24 சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

 

2. உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.



3. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் சென்னையில் மீட்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான 49 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.

 

4. திருவள்ளூர் அருகே இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட 9 மாத கர்ப்பிணிப் பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு உண்மையான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை.

 

5. திருவள்ளூரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் முருகானந்தம். புதுக்கோட்டையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.15¾ கோடி சொத்து சேர்த்ததாக, திருவள்ளூர் அரசு ஊழியர் வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

 

6. நடைபெற இருக்கும் உள்ளாட்சி தோதலில் திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி .



7. செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

 

8. அரசு நிதியை முறைகேடாகப் பெற்று ஊழலில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.




9.தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

10. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X