உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டு நிர்வாகிகள் உடன் ஆலோசனை செய்து வெற்றி பெறுவதற்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என ஆலோசனையை மாநில தலைவர் வழங்கினார். இதில் காஞ்சிபுரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்பத்தூர் உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



 

கட்சி நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்  பேசுகையில் , தோழமை கட்சி என வார்த்தை டிக்சனரி லேயே கிடையாது. காங்கிரஸ்   ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் பேசினால், அடிபணியுறார்கள், எதிராக பேசினால்  கூட்டணி தர்மம் மீறுகிறார்கள் . இந்த இரண்டுக்கும் நடுவே இருப்பது மிகக் கடினமானது.  இதனை  40 ஆண்டு காலமாக காங்கிரஸ் சந்தித்து வருகிறது. இது சரியா தவறா அதனால் பலன் உண்டா இல்லையா என்று தெரியவில்லை என ஸ்ரீபெரும்புதூர் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேசினார். மேலும், திமுக கூட்டணியில் திமுக கட்சி அடுத்து பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான் என கே.எஸ்.அழகிரி பேச்சு.



பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, இந்திரகுமாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை கருத்து சொல்லும் அளவிற்கு பெரிய விஷயம் அல்ல.எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும் மத்திய அரசின் பங்கு இல்லாமல் கொண்டு வருவதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு கடந்த 60 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டங்களை பெயர் மாற்றம் செய்து பாஜக அரசு கொண்டு வந்தது. பாஜக கொண்டு வந்த இரண்டே திட்டம் பணமதிப்பிழப்பு செய்தது மற்றும்  தவறாக ஜிஎஸ்டியை கொண்டுவந்தார்கள் இதனால் இந்தியாவின் வருவாய் குறைந்துள்ளது.

 

ஜிஎஸ்டி வரியால் வரும் வருவாய் பற்றாக்குறை மத்திய அரசு வழங்கவே இல்லை பாண்டிச்சேரி மாநிலத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது கூட நிதியில்லதா நேரத்தில் கூட மத்திய அரசு அதனை வழங்கவில்லை ஆகையால் மத்திய அரசு சொல்வதே தவிர செய்யவில்லை என குற்றம் சாட்டினார். முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X