சிவசங்கர் பாபாவிற்கு இரண்டு வழக்கில் ஜாமீன் வழங்கியது, செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம்

சிவசங்கர் பாபாவிற்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்சோ வழக்கில் மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது

Continues below advertisement
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முதலில் தமிழ்நாடு போலீஸ் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

போலீசார் தேடுவதை அறிந்ததும் சிவசங்கர் பாபா தலைமறைவானர் . இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் ஜூன் 16 ஆம் தேதி டெல்லியில் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உட்பட 4 ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர்.

சிவசங்கர் பாபா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதுமட்டுமின்றி பெண்ணை மானபங்கம் செய்தது உள்ளிட்ட 2 வழக்குகள் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா தன் மீது போடப்பட்டுள்ள இரண்டு போக்சோ மீது ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி  இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்சோ வழக்கிற்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல் போஸ்கோ வழக்கு ஜாமீன் தள்ளுபடி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜாமீன் கிடைத்தும், சிவசங்கர் பாபா மற்ற வழக்குகளில் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola