சென்னை நுங்கம்பாக்கத்தில் நாளை ( 01.07.2023 - சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (02.07.2023) இரண்டு நாட்கள் ‘இயற்கை சந்தை’ நடைபெற உள்ளது.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் மாத முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி ஞாயிறு ஆகிய நாட்களில் ‘இயற்கை சந்தை’ நடத்தப்படுகிறது.


நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை (Natural Bazaar) நடைபெற உள்ளது.  அதன்படி (நாளை) ( 01.07.2023) (சனிக்கிழமை} மற்றும் நாளை மறுநாள் (02.07.2023 (ஞயிற்றுக்கிழமை))  மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் இயற்கை சந்தை நடைபெறவுள்ளது.


இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.


மேலும் இந்த இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவையும் தரமும் நிறைந்த உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. 


எங்கே நடைபெறுகிறது?


அன்னை தெரசா மகளிர் வளாகம்,நுங்கம்பாக்கம் 


எப்போது?


சனிக்கிழமை (01.07.2023)


ஞாயிறுக்கிழமை (02.07.2023)




மேலும் வாசிக்க..


Lust Stories 2 Twitter Review: காமம் எந்த வகை... தமன்னா, மிருணாள் தாக்கூர் நடித்த ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ எப்படி இருக்கு?


Deepavali Ticket Booking: ரெடியா இருங்க மக்களே.. தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.. எப்போ தெரியுமா? முழு விவரம்..