திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர்கள் சசிகுமார் தனலட்சுமி தம்பதியர். இவர்களது மகள்  ஹீரா கௌசிகா (வயது 12) அரசு உதவி பெரும் அம்பத்தூர் ராமசாமி முதலியார் பள்ளியில் 7வது வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் 12ஆம்  வகுப்பிற்கு அரசு பொதுதேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதர வகுப்புகளுக்கு காலை அரை நாள் தேர்வும் மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை எனவும் மதியம் 12 மணிக்கு பிறகு இதர வகுப்பு பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் மதியம் வழக்கம்போல் அரை நாள் பள்ளிக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்த மாணவி அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து ஆவடி நோக்கி சென்ற 70 A தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது பள்ளிக்குழந்தைகள் பேருந்தில் ஏறினர். அதை சற்றும் கவனிக்காத பேருந்து ஓட்டுனர் பேருந்தின் தானியங்கி கதவுகள் அடைக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது படிக்கட்டில்  மாணவி ஹீரா கௌசிகா ஏற முயன்றபோது கதவு அழைத்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வலது காலில் பின் சக்கரம் ஏறி இறங்கியது.



அம்பத்தூர் காவல் நிலையம் ஏதிரே நடந்த விபத்தை நேரில் கண்ட, 8-ம் வகுப்பு மாணவர் சாரதி (13 வயது)  சமயோகிதமாக செயல்பட்டு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மனைவியின் உயிரை காப்பாற்றியுள்ளார், அம்பத்தூர் காவல் நிலைய காவலர்கள் உடனடியாக ஓடிவந்து மாணவியை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.


பேருந்தை பறிமுதல் செய்த அம்பத்தூர் போக்குவரத்து காவல்  துறையினர் ஓட்டுநர் நடத்துனர் இடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் இந்த விபத்து குறித்து உடனடியாக அயப்பாக்கத்தில் உள்ள பள்ளி மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 




பிற முக்கியச் செய்திகள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண