சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


2026 - ல் அம்மா ஆட்சி


புரட்சித் தலைவரும் அம்மாவும் ஏழை இளைய மக்களுக்காகவே வாழ்ந்து சென்றவர்கள். அவர் மறைந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரது வீடுகளிலும் மனங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இரு தலைவர்களும் ஆட்சிக்கு வந்து ஏழை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர்கள். அவர்களது வழியில் வரும் 2026 தேர்தலில் அம்மாவின் ஆட்சியை கொண்டு வந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுப்போம். 


திமுக ஒரு தீய சக்தி என எங்களது இரு தலைவர்களும் சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு சொல்லியதை செய்யாததால் தான் திமுகவை தீய சக்தியை என சொன்னார்கள். இப்போதும் அது தீய சக்தி தான்.


Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!


டெண்டர் மட்டும் கணக்கு காட்டுகிறார்கள்


மக்களுக்காக இந்த அரசாங்கம் எதுவும் செய்ததில்லை. வாயால் பேசிக் கொள்கிறார்களே தவிர எந்த வித வேலையும் நடக்கவில்லை. நீர்நிலைகளை சரி செய்யவில்லை. சரி செய்வதற்காக டெண்டர்கள் விடப்படுகிறது. அதில் பாதி பேர் டெண்டர் செய்ததாக கணக்கை காட்டி இருக்கிறார்கள்.


பலர் போட்டி மனப்பான்மையோடு டெண்டர் எடுத்தாலும் வேலையை செய்யாமல் இருந்திருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பாதிப்படைகிறார்கள். 


இந்த மழை வெள்ளத்தில் அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தையும் நீரில் தொலைத்த மக்கள் நிற்கதியாக நிற்கிறார்கள். அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் என ஜெயலலிதா கொடுத்த அனைத்தையும் நிறுத்திவிட்டு இருக்கிறது இந்த அரசு. 


இவை மாற வேண்டும் என்றால் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் மக்கள் நலமாக வாழ்வார்கள். இந்த நான்காண்டு காலத்தில் மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டார்கள். 


வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழக மக்களுக்காக அவர்களுடைய ஆட்சியையே நாங்கள் அமைப்போம். 


பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து அதை குடித்ததில் மூவர் இறந்த விவகாரம் தொடர்பாக


குடிநீரில் கழிவு நீர் கலந்து மூவர் உயிர் இழந்திருக்கிறார்கள் இன்னும் 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுள் சிலர் உயிருக்கு போராடி வருகிறார்கள்.


இந்த ஆட்சியில் சென்னையில் குடிநீர் வழங்குவதற்கு என மெட்ரோ என்கிற துறையும் அதற்கான அலுவலகமும் இருக்கிறது. குடிநீரில் கழிவு நீர் கலப்பது தெரிந்திருக்கும், உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களில் மெட்ரோ குடிநீரை நிறுத்திவிட்டு லாரிகள் மூலமாக குடிநீரை விநியோகம் செய்து இருக்கலாம்.  


திமுக அரசால் மக்கள் அவதிப்படுவது மட்டுமல்லாது உயிர் சேதாரமும் ஏற்படுகிறது. திமுக காரர்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என இருக்கிறார்கள். யுதவிர ஆட்சி அதிகாரத்தை ஒழுங்காக அவர்கள் செய்யவில்லை. அதனால் தான் இந்த 3 மரணங்கள் நடைபெற்றுள்ளது. 


விழுப்புரத்தில் இருளர் காலணியில் ஏராளமானவர்கள் அவர்களது சான்றிதழ்களை மழை வெள்ளத்தில் இழந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தனி அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கான சான்றிதழ்களை புதுப்பித்து தர வேண்டும். 


மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வருகிறீர்களா என்கிற கேள்விக்கு


ஆட்சியே அம்மாவின் ஆட்சிதான். அதை கொண்டு வரப்போவதும் நான்தான் என பதிலளித்தார்.