மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை கேட்ட எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டெண்டர் முறைகேடு
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி - நீதிபதி மாலா அமர்வில் இன்று (ஜூலை.01) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது எனக் கேள்வி எழுப்பினர்.
கோரிக்கை மறுப்பு
அப்போது வேலுமணி சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரான நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜூலை 18ஆம் தேதிக்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
மேலும் படிக்க : ஓட்டெடுப்பு நடத்தி தலைமையை நிரூபிக்க தயாரா? - அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சவால்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்