ஆந்திர மாநிலம், திருப்பதி புறநகர் போலீசால் தேடப்பட்டு வந்த, 4 ஆண்டுகள் தலைமுறைவு குற்றவாளி, கத்தார் நாட்டில் இருந்து, விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலையத்தில் கைது. வரதட்சணை கொடுமை வழக்கில், தலைமறைவாக இருந்தவர், தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ், விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து, ஆந்திர போலீசில் ஒப்படைத்தனர்.
வன்கொடுமை வழக்கு
சென்னை ( Chennai News ) : ஆந்திர மாநிலம், திருப்பதி புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் கொனிடாலா கிரிதர் (56). இவர் தனது மருமகளை கொடுமைப்படுத்தி, கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, அடித்து உதைத்ததாக, திருப்பதி புறநகர் போலீசில், கடந்த 2019 ஆம் ஆண்டு, இவருடைய மருமகள் புகார் செய்தார். இதை அடுத்து, திருப்பதி புறநகர் போலீசார், இவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல், அடித்து உதைத்தல், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து,கொனிடாலா கிரிதரை கைது செய்ய தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசில் சிக்காமல், தலைமறைவாகிவிட்டார். அதோடு இவர் வெளிநாட்டுக்கும் தப்பி சென்று விட்டார் என்ற தகவல் கிடைத்தது.
தலைமறைவு குற்றவாளி
இதை அடுத்து திருப்பதி புறநகர் மாநகர காவல் ஆணையர், கொனிடாலா கிரிதரை தேடப்படும், தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், எல்.ஓ சி.யும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கத்தார் நாட்டு தலைநகர், தோகாவிலிருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று புதன்கிழமை அதிகாலை, 1:50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.
4 ஆண்டுகள் தலைமுறை குற்றவாளி
இதே விமானத்தில் ஆந்திர மாநிலம், திருப்பதி புறநகர் பகுதியைச் சேர்ந்த, 4 ஆண்டுகள் தலைமுறை குற்றவாளியான, கொனிடாலா கிரிதரும் வந்தார். குடியுரிமை அதிகாரிகள், அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை கம்ப்யூட்டரில், பரிசோதித்தபோது, இவர் திருப்பதி புறநகர் காவல் ஆணையரகத்தால் தேடப்படும், 4 ஆண்டுகள் தலைமுறை குற்றவாளி என்று தெரிய வந்தது. இதை அடுத்து அவரை வழியில் விடாமல், நிறுத்தி வைத்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல்
மேலும் ஆந்திர மாநிலம், திருப்பதி மாநகர காவல் ஆணையரகத்திற்கு, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, தலைமறைவு குற்றவாளி, கத்தார் நாட்டில் இருந்து விமானத்தில் வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார் என்ற, தகவலை தெரிவித்தனர்.
பலத்த பாதுகாப்புடன் ஆந்திர மாநிலம் கொண்டு சென்றனர்
இதை அடுத்து திருப்பதி புறநகர் மாநகர காவல் ஆணையரகத்தின் தனி படை போலீசார், நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, கொனிடாலா கிரிதரை கைது செய்து, பலத்த பாதுகாப்புடன் ஆந்திர மாநிலம் கொண்டு சென்றனர்.