செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது. மேல்மருவத்தூர் ரயில் நிலையம், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஏராளமான உள்ளூர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. இந்நிலையில் மேல்மருவத்தூர் ரயில் நிலையம், கீழ்மருவத்தூர் ஏரிக்கு சொந்தமான, இடத்தில் நீர்வளத் துறை அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

 



செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா.  இவர் மேல்மருவத்தூர் மற்றும் பல்வேறு நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து, நீதிமன்றம் மூலம் பல உத்தரவுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின், கீழ் அச்சரப்பாக்கம் நீர்வளத் துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார், அது குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

அவர் கேட்ட கேள்விகள் பின்வருமாறு, நீர் வளத் துறைக்கு கட்டுப்பாட்டிலுள்ள கீழ்மருவத்தூர்  சர்வே எண் 47/1 இல் தென்னக ரயில்வேக்கு சொந்தமான என்னென்ன கட்டிடங்கள் உள்ளது. கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று இயங்குகிறதா, அல்லது அனுமதி பெறாமல் இயங்கினால், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெறவில்லை என்றால், அனுமதி பெறவில்லை என்ற தகவல் தரவும், உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.



 

அச்சரப்பாக்கம் நீர்வளத் துறை சார்பில் தற்பொழுது, பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கீழ்மருவத்தூர் சர்வே எண்  47/1 இல் தென்னக ரயில்வேக்கு சொந்தமான மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் , மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ,கழிவறை மற்றும் ரயில் நிலையக் கட்டிடம் உள்ளது. மேல்கூறப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு, இவ்வாலுவகம் மூலமாகவோ அல்லது நீர்வளத்துறை மூலமாகவோ இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தகவல் கொடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் கீழ்மருவத்தூர் ஏரியில் அனுமதி இல்லாமல் ரயில் நிலையத்தின், பல்வேறு கட்டிடங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் நீர்வளத் துறை சார்பில், 02/12/21 தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறி மேல்மருவத்தூர் ரயில்வே நிர்வாகத்திற்கு, அனுப்பிய நோட்டீசும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படிவம் 3-இல் கீழ்மருவத்தூர் ஏரி பகுதியில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை, அகற்ற வேண்டும் என நீர்வளத் துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.



 

இதுகுறித்து ராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, கட்டிடங்களுக்கு அனுமதி இல்லை என்றால் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திற்கே அனுமதி இல்லை என்று தான் பொருள். அனுமதி இல்லாமல் ரயில் நிலையம் இயங்கி வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது என தெரிவித்தார், மேலும் கூறுகையில், அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எப்படி ரயில்வே, துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது என தெரிவித்தார்.