மகளிர் காவல் நிலையத்தில் அவமானம் ; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு !! மனித உரிமை ஆணையம் அதிரடி
சென்னையை சேர்ந்த வீரபாரதி தேவி என்பவர் , தன் தம்பி விமல்ராஜ் , வழக்கறிஞர்கள் ரேவதி, அசோக் ஆகியோருடன் 2021 பிப்ரவரி 16 - ல் சென்று, குடும்பத் தகராறு தொடர்பாக கணவர், உறவினர்கள் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். துணை கமிஷனர் ஆலோசனையின் படி , தாம்பரம் மகளிர் காவல் நிலையம் சென்றனர்.
மிரட்டி பொய் வழக்கு பதிவு
காவல் நிலையம் சென்றவர்களுக்கு குடிநீர் கூட தராமல், கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காமல் , போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், புகார் கொடுத்த தங்களை மிரட்டி, பொய் வழக்கு பதிவு செய்து , அத்து மீறலில் ஈடுபட்டதாக வீரபாரதி தேவி, விமல்ராஜ், அசோக் ஆகியோர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தனர்.
மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில் ;
வீரபாரதி தேவி, விமல்ராஜ் ஆகியோருக்கு எதிராக போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது ஆணைய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வீரபாரதி தேவியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காவல்துறை முன்வரவில்லை. எனவே, குற்றச் சாட்டுகளாகவே கருதப்படுகின்றன. எனவே, விமல்ராஜிக்கு ஒரு லட்சம் ரூபாய், வீரபாரதி தேவிக்கு 50,000 ரூபாய் என, இழப்பீடாக, 1.50 லட்சம் ரூபாயை நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.