சென்னை ; வீட்டில் சபரிமலை பூஜையில் கத்தியுடன் புகுந்த நபர் !! அதிர்ச்சி பிண்ணனி

Continues below advertisement

சென்னை ஜாபர்கான்பேட்டை கன்னியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் அருண்குமார் ( வயது 40 ) என்பவர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து கடந்த 07 ம் தேதி அன்று இரவு வீட்டில் ஐயப்ப பூஜை நடத்தி கொண்டிருந்ததாகவும் , அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து பெண்களை இடித்துக் கொண்டு அங்குமிங்கும் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அருண்குமாரின் மாமா சுகுமார் என்பவர் கணேஷிடம் ஏன் இவ்வாறு பூஜை சமயத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடக்கிறாய் என கேட்ட போது கணேஷ், சுகுமாரை கன்னத்தில் அறைந்ததாகவும் , சத்தம் கேட்டு தடுக்க வந்த அருண்குமாரையும் கணேஷ் தகாத வார்த்தைகளால் பேசி , தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, காட்டி மிரட்டி அருண்குமார் வைத்திருந்த பணம் ரூ.500 பறித்துக் கொண்டு வெளியே சென்ற போது அங்கிருந்த நபர்கள் அவரை பிடிக்க முற்படவே அந்த நபர் வெளியே சென்று அங்கு கடையிலிருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்களை தரையில் வீசி ரகளை செய்து தப்பிச் சென்றுள்ளார்.

Continues below advertisement

அருண்குமார் குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கணேஷ் ( வயது 36 ) என்பவரை கைது செய்தனர்.  

அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கணேஷ் குமரன் நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 2 கொலை, 2 கொலை முயற்சி உள்பட சுமார் 19 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கணேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்ட விரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது. சுமார் 3 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்.

சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் தண்டையார்பேட்டை இரயில் நிலையம் அருகே கண்காணித்து அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த பெண் உட்பட 2 நபர்களை பிடித்து விசாரணை செய்து சோதனை செய்த போது, அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் ( வயது 45 ) , மற்றும் மோகனா ( வயது 24 ) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் விமல் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.  

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.