ரயில் சேவை ( chennai beach to chengalpattu train )
சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவை மிக முக்கிய பொது போக்குவரத்துக்காக இருந்து வருகிறது. சாலை மார்க்கமாக செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் ரயில் சேவையில் பயன்படுத்துகின்றனர். அதேபோன்று மின்சார ரயில் கட்டணம் என்பது மிக குறைவு என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர்.
ரத்து செய்யப்படும் ரயில்கள்
சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் இன்று ( செவ்வாய்க்கிழமை ) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் இன்று ( செவ்வாய்க்கிழமை ) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் - தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள்
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 மணி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ரயில்கள்
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 11 முதல் பிற்பகல் 2.20 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், காஞ்சிபுரம் காலை 9.30 , திருமால்பூரில் காலை 11.05 இருந்து புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் காலை 10 புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தாம்பரம் - சென்னை இடையே இன்று மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
அதேப்போல, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடவெளியில் இயக்கப்படும். அதே போல, ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சென்னை சென்டிரல் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.