செம்பரம்பாக்கம் ஏரி 

Continues below advertisement

சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஏரிக்களில் இருந்து மழை காரணமாக தண்ணீர் நிறம் வருவது வழக்கம்

செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்

Continues below advertisement

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 22.06 அடியாக உள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.65 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 3.135 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 362 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 188  கன அடியாக உள்ளது (  குடிநீருக்காக 104  கன அடி நீர் ,சிப்காட் தேவைக்காக 3 கன அடி நீர், 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது, பிற காரணங்களுக்காக 31 கன அடி நீர் ). தொடர்ந்து அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்  மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

காஞ்சி செங்கை மாவட்ட ஏரிகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 30 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 11 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 ஏரிகளில் 4 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 93 ஏரிகளில் 7 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரிகள் மிக வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்திரமேரூர் ஏரியின் நிலவரம் என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக உத்திரமேரூர் ஏரி இருந்து வருகிறது. உத்தரமேரூர் ஏரியின்  மொத்த அடி 20 அடி அதில் 18 புள்ளி 50 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. உத்திரமேல ஏரியின் முழு கொள்ளளவில் 92.50 சதவீதம் தண்ணீர் எட்டி உள்ளது. உத்திரமேரூர் ஏரி 90% க்கு மேல் நிரம்பியுள்ளதால் கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது என்ன ?

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது

01.11.2023 மற்றும் 02.11.2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

03.11.2023 மற்றும் 04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.