செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தன்னை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தியதாகவும், அது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் .




கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் தனது தாய் மற்றும் அக்கா ஆகியோருடன் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த அவருடைய உறவினரான பெரியப்பா மகன் குகன் தினேஷ் என்பவர் அடிக்கடி தன் குடும்பத்துடன் சண்டைபோட்டு வருவதாகவும் ஒரு கட்டத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அந்த சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலில் சதுரங்கப்பட்டினம் காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, இதனை அடுத்து மகாபலிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களையே மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அந்த ஊரில் இருக்கும் அனைத்து நபர்களும் சம்பந்தப்பட்ட குகன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பரான எல்லப்பன் ஆகிய இருவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், சொல்வதை கேட்கவில்லை என்றால் தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.




இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவை தொடர்ந்து டிஎஸ்பி தலைமையில் மீண்டும் மறு விசாரணை நடத்தப்பட்டது. சமூக வலைத்தளத்தில் சம்பந்தப்பட்ட வீடியோ மிக வைரலாக பரவி வந்த நிலையில் இன்று, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் இதில் ஈடுபட்ட, குகன் தினேஷ், எல்லப்பன்,பாலா கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதில் ஒருவர் மீது போக்சே வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். சம்பந்தப்பட்ட சிறுமியின் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பகிர்வது சட்டப்படி குற்றம் எனவும்  பகிர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர