சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் 20 செமீ மேல் மழை பதிவாகும் அபாயம் உள்ளதால் வானிலை மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement



மேலும், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் இன்று இரவு 7 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, தேனி, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் இரவு வரை மழைக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.



 


முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இன்றைய அறிக்கை


1-12-2025: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்


2-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்


03-12-2025 முதல் 05-12-3025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


06-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


07-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


 


.