தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீலகிரி, கோயம்புத்தார், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர். திண்டுக்கல், ஈரோடு, சேவல், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார் பகுதிகளில் இன்று காலை மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு வானிலை தொடர்பாக பிரபல தனியார் வானிலை கணிப்பாளர் பிரதீப் ஜான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னையில் காலை நேரங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலில் இருந்து மேகங்களில் நகரும் போது மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
வானிலை மையத்தின் எச்சரிக்கை:
01.09.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02.09.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், இருப்பர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
03.09.2022 மற்றும் 04.09.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நிலவரி, கோயம்புத்தூர், இருப்பர், தேனி. திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேதார், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.