செங்கல்பட்டு மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா வயது 28. இவர் தனது நண்பர்களான கார்த்திக், மோகன்ராஜ் உள்ளிட்ட நண்பர்களுடன் அருகே உள்ள சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, சைலோ காரில் வந்த மூன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அங்கு நண்பர்களிடையே பேசிக் கொண்டிருந்த ராஜேஷ் கண்ணா என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.



 

அப்பொழுது தடுக்க முயன்ற கார்த்திக், மோகன்ராஜ் இருவரையும் கத்தியால் கை மற்றும் கால்களில் வெட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்- செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். 

 



 

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, செங்கல்பட் மாவட்டம் வல்லம் அடுத்த பாரதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா, இரண்டு வருடங்களுக்கு பிறகு சிலை வைக்க அனுமதி கொடுத்த காரணத்தினால் இவர், இவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் விநாயகர் சிலை நிறுவியுள்ளார். இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை அருகே நள்ளிரவு அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்து கொலை செய்து விட்டு சென்றதாக தெரிகிறது.

 

 

மேலும் அருகில் இருந்தவர்களையும் அந்த மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா , வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர் .

 

 

 

 

வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளை அழைத்து வர சென்ற இளைஞர் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், இவரது மகன் தினேஷ்குமார், பட்டதாரி இளைஞர். நேற்று மாலையில் வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளை அழைத்து வர தினேஷ் குமார் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கி உள்ளது. மின்னல் தாக்கியதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

 



இந்நிலையில் இடி தாக்கிய வயல்வெளியின் அருகே வேறொரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த செளந்தரராஜனின் மகள் ரஞ்சனா என்ற சிறுமியும் மின்னல் தாக்கியதில் காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து,மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள இரு வேறு சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்து சென்ற  வாலாஜாபாத் போலீசார் உயிரிழந்த தினேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக , காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.