காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தோடு வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.
இந்த திடீர் மழையால் சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளானார்கள்.
மேலும் கிராமப்புறங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் கிராம மக்கள் ஆலங்கட்டியை தங்கள் கைகளில் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதகாலமாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பெய்து வரும் இந்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் பகுதியிலும் மழை
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள ஓரிக்கை, பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து பெய்தது வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில் மழை பெய்து வெப்பம் குறைந்துள்ளதாகவும், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் . இருப்பினும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளக்குளி பெருமாள் கோவில் தெரு மேட்டு தெரு கீரை மண்டபம் மூங்கில் மண்டபம் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில், அதிக மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.
இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் அந்த பகுதிகளில் கடப்பதற்கு பத்து நிமிடத்திற்கு மேல் ஆகுவதாகவும், அதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் இதுபோன்ற அவ்வப்போது நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை உடனடியாக சரி செய்து மழைநீர் தேங்காமல் மாநகராட்சி பார்த்துக்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்