சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 
சென்னை மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி தொழிற்பேட்டை, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.


வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. நண்பகல் நேரத்தில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை.






ஆனால், நேற்றிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருக்கழுகுன்றம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும்,   வாலாஜாபாத் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!






இதேபோல், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக சென்னையின் அமைந்தக்கரை, அயனாவரம், எழும்பூர்,மதுரவாயல்,மாம்பலம்,பூவிருந்தவல்லி,பொன்னேரி,ஸ்ரீபெரும்புதூர்,உத்திரமேரூர், அம்பத்தூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளது.


இதனிடையே, இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும்.


தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.